ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார். இப்படத்தை கெளதம்ராஜ் இயக்கியுள்ளார்.

இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ரிலீசாகும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ‘நீ என் நண்பனே’ எனத் தொடங்கும் பாடலை, சூர்யா – கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார்.