மேஷம்

கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பிசினஸ்ல ஈடுபட்டிருக்கறவங்க புதிய ஏஜென்சிகள் எடுப்பீங்க. அலுவலகத்திலும் வீட்டுச்சூழலிலும், பிசினசிலும் வேலையாட்கள்  ஒத்துழைப்பாங்க. ஸ்டூடன்ட்ஸ்க்குச் சீரான முன்னேற்றங்கள் ஏற்படும். மாமன் வகை உறவுகள் கை கொடுத்து உதவுவாங்க. உடன் பிறந்தவங்களும் சண்டை முடிஞ்சு வெள்ளைக் கொடி காட்டி, உதவிக்கு வருவாங்க. குறிப்பாகக் காதல் விவகாரங்களில் அவங்க உதவி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் கல்வி மற்றும் சுப செலவுகள் ஏற்படும். பெண்கள் சூழ்நிலை அறிந்து நடப்பது அவசியம். தோழிகளிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நலம் தரும். குறிப்பா அவங்களை நம்பி உங்க ரகசியங்களைச் சொல்ல வேணாம். கவனமா இருங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 29ம் தேதி முதல் மார்ச் 31 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருத்தல் அவசியம்

ரிஷபம்

நீண்ட நாட்களாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காகவோ அல்லது வாங்குவதற்காகவோ நீங்க  எடுத்த முயற்சிகயெல்லாம் நல்லபடியா வெற்றிகரமா அடையும். சகோதர உறவுகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். ஆனாலும் சண்டை சச்சரவுகள் வேண்டாங்க. அதிலும் குறிப்பா வழக்குப் போடுன்னு யாராச்சும் அட்வைஸ் செய்தால்  போடவே போடாதீங்க.  ஆன்மிகம் பற்றிய நாட்டம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வ ஆலயங்களுக்கும் குல தெய்வக் கோயிலுக்கும் போய்விட்டு வருவீங்க.  உங்க உடல்நலத்தில் கவனம் தேவை. அதை அலட்சியம் செய்யாமல் இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லாமல் இருப்பீங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருத்தல் அவசியம்

மிதுனம்

பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். அதாவது அப்பா அல்லது தாத்தா வழியில் உள்ள வீடுநிலம் ஆகியவை பற்றி கோர்ட் கேஸ் ஏதாச்சும் இருந்தா அது நல்லபடியா முடியுமங்க. சுருக்கமாச் சொன்னால்…  உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும்பொதுவாவே கோர்ட் கேஸ்  சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். நான்கு  சக்கர வாகனமோ அல்லது இரண்டு சக்கர வாகனமோ  வாங்கும் யோகம் உள்ளது. பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லதுங்க. குறிப்பா கணவன் மனைவிக்குள்ளே சண்டை சச்சரவு வராம பார்த்துக்குக்குங்கமா. க்ளோஸ் நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியமுங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 2 தேதி முதல் ஏப்ரல் 5 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருத்தல் அவசியம்

கடகம்

நீங்க பிசினஸ் செய்பவரா? எனில், வியாபாரம்  சாதகமாக இருக்கும். பார்ட்னர் அனுசரணையா இருப்பாங்க.  புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. செல்வாக்கு படைத்த உறவினர் உதவுவார். வீட்டிலோ வேலை பார்க்கும் இடத்திலோ உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்களால சில அதிருப்திகள் வந்து  நீங்கும்.  குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படுமுங்க.  மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவீங்க. அது பற்றி ரொம்பவே பயந்துக்கிட்டிருந்தீங்களே. இப்போ இதுக்கா பயந்தோம்னு சிரிப்பீங்க.  பல ஆன்மிக  ஸ்தலங்களுக்குப் போகணும்னு நினைச்சிருந்த உங்களோட ஆசை மெல்ல நிறைவேறும்.

சிம்மம்

ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகள்கூடக் கிடைக்கும். பெண்களுக்கு தாய்  வீட்டிலிருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர விரும்பி சந்தோஷமா வருவீங்க.  வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நல்லதுங்க. ஆடல், பாடல்  போன்ற கலைத் துறையில் உள்ளவங்களுக்கு  ஃபாரின் போக வாய்ப்பு கிடைக்குமுங்க. கணவர் அல்லது மனைவியின் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகளும் ஏற்பட சான்ஸ் உண்டுங்க. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் பாஸ் செய்வீங்க. நண்பர்களிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லதுங்க. குழந்தைகளின் நடவடிக்கையில் இருந்தவந்த கவலைகள் தீரும்.

கன்னி

பெண்கள் இடம் பொருள் சூழ்நிலை அறிந்து நடப்பது  நல்லதும்மா. மாமன், அத்தை வகை உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சுருங்கச் சொன்னால் அப்பா, அம்மாவின் கூடப் பிறந்தவங்க உங்களைப் புரிஞ்சுப்பாங்க. அல்லது நீங்க அவங்களைப் புரிஞ்சுப்பீங்க. பெற்ற மகன் அல்லது மகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் உண்டாகும். அவசரத் தேவைக்காக சகோதர சகோதரிகள் வாங்கிய கடனை அடைப்பீங்க.  உத்யோகம் சாதகமாக இருக்கும். எனவே வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆவது பற்றி யோசிக்காதீங்க. அலுவலகத்தில் உங்களோட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.  அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும்.

துலாம்

வீடு அல்லது பிசினஸ் செய்ய அச்சாரம் போடுவீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாங்க.  இதைப் பல ராசிபலன்களில் படிச்சிருப்பீங்க. எனவே அலட்சியமா நினைக்காதீங்க. நெருங்கிய நட்பு வந்து கெஞ்சும்போது உங்களை மறந்து “யாமிருக்க பயமேன்.. அஞ்சேல்” என்று சொல்லிக் கையெழுத்துப்போட்டுவிட வாய்ப்பிருக்கு. ஜாக்கிரதை.  உங்க வீட்டில் நிச்சயதாத்தம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. அலுவலகத்தில் நிறை  குறைகள் இருக்கத்தாங்க செய்யும். வேலையில் கவனமாக இருப்பது அவசியம். பதவி உயர்வு பற்றிச் செய்திகள் காதில் விழும். ஜாலிதான். நீங்கள் விரும்பிக்கேட்டிருந்த வெளியூர் மாற்றல் கிடைக்குதுமுங்க

விருச்சிகம்

உடன்பிறந்த சகோதரருக்கு உதவி செய்வீங்க. மாணவர்களின் கல்வித்தரம் மேன்மையடையும். உறவினர்களுடன் ஜாலியாப் பேசி மகிழ்ச்சி காண்பீங்க. மகன் அல்லது மகளால் கூடுதல் செலவுகள் வரும். அவர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு மெல்ல மெல்லக் கரைஞ்சு காணாமல் போகும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையும், நிதானமும் கவனம் தேவைங்க. பார்ட்னர்களோட பிசினஸ்  செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கொஞ்சம் அதிகக் கவனம் செலுத்தணுங்க. உத்யோகஸ்தர்கள் அலுவலகக்  விஷயங்களை அதிகப் பொறுமையுடன் கையாள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. அலுவலகத்திலும் தனிப்பட்ட முறையிலும் வெளிநாடு சம்பந்தமான நல்ல செய்தி வரும்.

தனுசு

மகள் அல்லது மகன் சம்பந்தமாக இனிப்பான நியூஸ் உண்டுங்க. வாகன யோகம் உண்டு. தேக்க நிலையில் இருந்த கம்பெனி வழக்குகள் முடிவுக்கு வரும். இதனால் பாஸ் உங்களைக்கூப்பிட்டுக் கைகுலுக்கி உங்களின் சம்பள உயர்வை அறிவிப்பார். பதவி உயரவும் சான்ஸ் இருக்குங்க. பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து  சேரும். அது பல காலம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த நல்ல செய்தி அல்லவா? எனவே மகிழ்ச்சியில் மனம் துள்ளும். நண்பர்களால் சில சின்னஞ்சிறு டென்ஷன்ஸ் வந்து நீங்கும். அடுத்தவங்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஒங்களோட கவுரவம் உயரும். பாராட்டுக் கிடைக்கும். செல்வாக்கு இன்கிரீஸ் ஆகும். பொதுப் பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீங்க. இக்கட்டான சூழலில் உங்களுடைய விவேகமான செயல்திட்டங்கள் வெற்றிபெற்று தரும்.

மகரம்

அலுவலகத்தில் வாடிக்கையாளர்களிடம், நேரத்திற்குத் தக்கவாறு பேசி நல்ல ரிசல்ட் காண்பீங்க. இதனால் உங்க பாஸ் பாராட்டுவார்.  குடும்பத்தில் கலகலப்பும், மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைஞ்சு இருக்கும். சுப நிகழ்வு வைபவத்துக்காக உறவினர்கள் ஒன்றுகூடுவதால் இந்த சந்தோஷம் இன்னும் அதிகமாகவே இருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கெல்லாம், நிலுவையில் இருந்த பாக்கிகள் விரைவில் வசூலாகும். நீங்க எதிர்பார்த்துக்கிட்டிருந்த வரவு வரும். புதிய பெண் நண்பர்களின் மூலம் செயல்திட்டங்களில் வெற்றி காண்பீங்க. தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மேலும் வாங்குவீங்க.   பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்போறீங்க. குறைச்சுக்கலாமே?

கும்பம்

உங்க வீட்ல யாருக்காச்சும் குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருக்கீங்க என்றால்..   வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்குமுங்க. நீங்க கலைத்துறையில் உள்ளவரா? எனில், பல வகைகளில் நல்ல வசதி  வாய்ப்புகள் தேடி வரும். பிரபலமான பெரிய மனிதர்கள்  அல்லது உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு மட்டுமின்றி அவங்களோட உதவியும் கிடைக்கும்.  பல வகைகளில் நல்ல வசதி  வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும்  சான்ஸ் வரும்.  அக்கம் பக்கத்தினர், தோழிகளிடம் பெண்கள் அளவோடு பழகுவது நல்லதும்மா. விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது  கூடாது. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். சந்தோஷம் ஃபவுன்டன்  மாதிரிப் பொங்கும்.

மீனம்

பேச்சால் நல்ல பெயர்  கிடைக்குமுங்க. மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் நன்மை ஏற்படும். தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்க்கப் பாருங்க.  தகப்பனார் வழி உறவினர் மூலம் பலகாலம் தீராத பிரச்சினை ஒன்று தீரும். மாணவர்களைப் பொருத்த வரை நல்ல டைம். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் செயல்களில் மந்தத்தன்மை இருந்தாலும் அது நீங்க டென்ஷன் ஆகும் அளவுக்கு இருக்காது.  நெருங்கிய உறவினர் மற்றும் குடும்பத்தில் உள்ளவங்களுடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீங்க. முக்கியமான விஷயங்களில்  கணவர் /மனைவியின்  ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லதுங்க.