மேஷம்

இந்த வாரம் பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீங்க. மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவாங்க. குடும்பத்துல அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீங்க. பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பண விஷயத்தில் கேர்ஃபுல்லா இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வேலைப்பளு குறைய வாய்ப்புள்ளது. தொழில், பிசினஸில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். வேலையில் தாமதங்கள் காணப்படும்.

ரிஷபம்

இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனசுல ஏதாவது தேவையில்லாத கற்பனை சஞ்சலம் இருந்துக்கிட்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பாங்க. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும். உங்க மனக்குறையை வீட்டில் உள்ள பெரியோர்களிடம் சொல்ல அவர்களிடமிருந்து மனதிற்கு ஆறுதல் தரக் கூடிய ஆலோசனை கிடைக்கும். அறிமுகம் இல்லாதtங்க கிட்ட வீட்டு நிலையைச் சொல்ல வேண்டாம்.

மிதுனம்

இனம்புரியாத கவலை மனசுல இருந்துக்கிட்டிருந்துச்சு இல்லையா? அது ஃபுல்ஸ்டாப் வெச்சுக்கும்.  தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு சக்ஸஸ் ஆவீங்க. இப்போது உள்ள வேலையை மட்டும் கவனிச்சுக்கிட்டு வாங்க. எதிலும் நிதானத்துடன் முடிவு எடுத்து நன்மை காண்பீங்க. அவற்றைக் கண்டு நீங்க நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். முயற்சிகளைத் தொடருங்கள். எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் பெறுவீங்க. உடல்நலத்தில் கேர்ஃபுல்லா இருக்க வேண்டும். உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்குக் தியானம் செய்வது உதவிகரமாக இருக்கும். மனசை அமைதியா வெச்சுக்குங்க. டோன்ட் ஒர்ரி. அதிர்ஷ்ட பலன்களை எதிர்பார்க்கலாம். உங்க  வேலையை ஈஸியா முடிக்கக் கூடிய யுக்திகளைக் கண்டறிவீங்க. பண வரவு சிறப்பாக இருப்பினும், மறுபுறம் செலவும் இருக்கக்கூடும்.

கடகம்

செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்துல பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுப்பீங்க. அது ஒங்களோட எதிர்காலத்திற்கு உதவும். கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீங்க. மன உளைச்சலால் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிராப்ளம்ஸ் தீரும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுவீங்க. முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியா வெச்சுக்குங்க.  ஃபேமிலிலயும், தொழிலிலும் உங்க புதுத் திட்டம் வெற்றி  தரக்கூடியதாக இருக்கும். உறவினர் வகையில் விரோதம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. சொல், செயலில் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயரதிகாரிங்க ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறுவீங்க. புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போறீங்க. எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும். பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நல்லநிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதன் காரணமா நீங்க எதிர்காலத்துல நிம்மதியாக வாழ வழிபிறக்கும். படிப்பில் உங்க கடின முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீங்க. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களோட அறிவுரை கேட்பது நல்லது. தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மூலம் ஆறுதல் பெறலாம். கேர்ஃபுல்லா இருங்க. வார ஆரம்பத்தில் பேச்சில் கவனமா இருங்கப்பா.

கன்னி

பக்குவமான அணுகுமுறையினால் வெற்றி பெறுவீங்க. நினைச்ச காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்பட சான்ஸ் இருக்குங்க. கணவன், மனைவிக்கிடையே மனசு விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைங்ககிட்ட கவனமா பேசுவது நல்லது. மனசுல இருந்துக்கிட்டிருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனசுல உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். மனசுல தேவையில்லாத பயம் காரணமாக விரக்திக்கு என்ட்ரி குடுக்காம பார்த்துக்குங்க.

துலாம்

இந்த வாரம் மனசுல இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீங்க. வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவாங்க. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். இந்த வாரம் உங்க உடன் பிறப்புகள் மூலமாக இருந்த  தொல்லைகள் தீரும்.  பயணங்கள் தாமதப்படும். அதன் காரணமாக நன்மைகள் ஏற்படும். உங்க செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். முன்பைவிட இப்போ பொறுமை கூடியிருக்கு ஒங்க கிட்ட. அதுதான் எல்லா விஷயத்தையும் சக்ஸஸ் பண்ணுதுங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக் கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீங்க. விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீங்க. கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடிச்சுடுவீங்க. வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் நேர்த்தி ஏற்படும்.  அது வெற்றியைத் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் எழும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் : மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

திடீரென்று கோபம் வருவதற்கு அனுமதிக்காதீங்க. ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவாங்க. குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். உயர்  அதிகாரிங்க ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைப் பளுவும் கூடும். சிலருக்குப் வாகன யோகம் உண்டு. கூட்டாளிங்க நியாயமற்ற நடவடிக்கைகள் உங்க மனசுல  குழப்பத்தைத் தரும். முன்பின் அறியாதவர்களுடன் பேச்சு வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைங்க தேர்ச்சி பெருமிதம் தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும். கொஞ்சநாளா மனசுக்குள்ள இருந்துக்கிட்டிருந்த பயமும் வேதனையும் காணாமல் போயிருக்குமே? கங்கிராட்ஸ்.

சந்திராஷ்டமம் : மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மகரம்

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீங்க. கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்க சார்த்திருக்கற துறையினருக்கு சகஜநிலை காணப்படும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீங்க. எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்தவங்க அனுகூல பலனைத் தருவாங்க. இருந்தாலும் இதை எல்லாம் சமாளிப்பீங்க. குழந்தைங்களால செலவுகள் கொஞ்சமே கொஞ்சம் அதிகரிக்கும். உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படலாம். எதிரிகளால் தொல்லை ஏற்படும். பழைய பயம் தீர்ந்து சந்தோஷம் வரும்.

கும்பம்

குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீங்க. வீடு, மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவாங்க. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை தீர்ந்து நிம்மதி உண்டாகும். உங்களுக்குக் கீழே பணிபுரியறவங்க தவறான அபிப்ராயங்கள், உங்க முயற்சியால் விலகும். புதிய தொடர்புகள் ஏற்படும். குறுகிய பயணங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மன வருத்தங்கள் மறைந்து நிம்மதியும் குதூகலமும் ஏற்படும்.

மீனம்

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். அரசியல்துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஒங்களோட யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவாங்க. வாரத்தின் பிற்பகுதியில் உங்க பொருளாதார தேவைகள் எல்லாமே சிறப்பா நிறைவேறும். ஃப்ரெண்ட்ஸ் கூடப் பொழுது போக்குகளுக்குப் பணம் செலவழிப்பீங்க. ரிலேடிவ்ஸ்ஸின் தேவைக்கேற்ப அவர்களுக்கு நிதியுதவியும் அளிப்பீங்க!