
தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமாகி உள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீவிர முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மாளவிகா மோகனன் வசம் சென்றது.
இந்நிலையில், தற்போது நெல்சன் இயக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, நடிகை ராஷ்மிகா, ஒரு தெலுங்கு படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அதையடுத்து அந்த பட வாய்ப்பை பூஜா ஹெக்டே கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]