டாக்கா: ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம், உலகின் மிக இளம்வயது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான்.

தற்போது வங்கதேச நாட்டில் ஆப்கானிஸ்தான் – வங்கதேச அணிகள் கலந்துகொள்ளும் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டை அடுத்து, ரஷீத் கான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஆப்கன் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இவர் ஒரு லெக் ஸ்பின்னர் ஆவார்.

இதன்மூலம், மிக இளம் வயதில் ஒரு தேசிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரஷீத் கான். இதன்மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வே அணியின் டடேன்டா பைபூ செய்த சாதனையை முறியடித்துள்ளார்.

ரஷீத் கானின் தற்போதை வயது 20 ஆண்டுகள் 350 நாட்கள்.

தங்களுடைய இளம் வயதில் டெஸ்ட் அணியின் கேப்டன்களாக கடந்த காலங்களில் பொறுப்பேற்றுள்ள சில வீரர்களின் விபரங்கள்.

* டடேன்டா பைபூ (ஜிம்பாப்வே) – 20 ஆண்டுகள் 358 நாட்கள்
* பட்டோடி நவாப் (இந்தியா) – 21 ஆண்டுகள் 77 நாட்கள்
* வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) – 22 ஆண்டுகள் 15 நாட்கள்
* க்ரேம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா) – 22 ஆண்டுகள் 82 நாட்கள்
* ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) – 22 ஆண்டுகள் 115 நாட்கள்