உணவுக்காக விலங்கினங்களை வேட்டையாடுவதில் கில்லாடியான இந்த புலி ஆஸ்ரேலிய வனங்களில் காணப்பட்டதாகவும், தற்போது இந்த அரிய வகை புலியினங்கள் உலகில் எங்கும் காணப்படவில்லை என்று என்எஃப்எஸ் ஏ தெரிவித்து உள்ளது.
கடைசியாக காணப்பட்ட டாஸ்மானியன் புலியின் பெயர் பெஞ்சமின். இது டாஸ்மானியாவில் இருந்த விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1936 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி பெஞ்சமின் உயிர் இழந்தது.
முன்னதாக 1935 ஆம் ஆண்டு, அந்த அரிய வகை புலி குறித்து வீடியோவாக படம் எடுத்து பத்திரப்படுத்திஉள்ளனர். தற்போது அதை National Film and Sound Archive of Australia (NFSA) என்னும் அமைப்பு ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 21 நொடி மட்டுமே ஓடும் இந்த வீடியோ 85 ஆண்டு களுக்கு பிறகு வெளியாகி உள்ள பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
‘Tasmania the Wonderland’ என்னும் பயனக் குறிப்பு வீடியோவிலிருந்துதான் பெஞ்சமினின் வீடியோ பிரித்து எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் டாஸ்மானியா பிலி குறித்து பேசும் நபர், “இதுதான் தற்போது உலகிலேயே மனிதர்கள் பிடியில் உள்ள ஒரேயொரு டாஸ்மானியன் புலி. மனித நாகரீகத்தால் இவை அழிவிற்குத் தள்ளப்பட்டுள்ளன,” என்கிறார்.
Video thanks: NFSA ,