கேரளா: பஞ்சாயத்து கம்ப்யூட்டர்களை தாக்கியது ரான்சம்வேர் வைரஸ்

Must read

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியது.


கேரளாவின் வயநாடு மாவட்டம் தாரியோடே பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் இன்று கம்ப்யூட்டர்களை ஆன் செய்தபோது, அவர்களது நான்கு கம்ப்யூட்டர்களும் ஹேக்கிங் செய்யப்பட்டது தெரியவந்தது.

வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியது. இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுபோலவே, பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொன்னி அருகே உள்ள அருவாபுலம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article