உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரான்சம்வேர் மிகப்பெரிய சைபர் தாக்குதல் கடந்த வாரம் நடை பெற்றது. இந்த எதிர்பாராத தாக்குதலில்வ 150 நாடுகள் பாதிப்புக்குள்ளாகின. இதன் காரணமாக பெரும்பாலான உலக நாடுகளின் அரசாங்கங்கள் பாதிப்புக்குள்ளாகின. அரசின் பாதுகாப்பு ஆவனங்களும் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
இந்தியாவில் நேற்று கேரள அரசு கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரசால் தாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் ரான்சம்வேர் வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும் என்று இந்திய வங்கி நிர்வாகிகளுக்கு சைபர் க்ரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் வங்கிகளின் இணையவழி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.
மேலும் ரான்சம்வர் தாக்குதல் காரணமாக வங்கிகளின் ஏடிஎம் சேவைகளும் ஒருசில நாட்களுக்கு செயல்படாது என தெரிகிறது.
ஏற்கனவே இதுபோன்ற வைரஸ் தாக்குதல் குறித்து உலக நாடுகள் விழிப்புணர் கொள்ள வேண்டும் என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.