பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர்.

இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ரன்பீர் வீட்டில் தனிமையில் இருப்பதாக அவரது தாயார் நீட்டுசிங் தெரிவித்துள்ளார்.

ரன்பீர் கபூர், ‘பிரமாஸ்திரா’ என்ற இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கிறார்.

அமிதாப்பச்சன் உள்ளிட்டோரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள்.

ரன்பீருக்கு கொரோனா உள்ளதால் அந்த படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ‘கங்குபாய் கதியாவாடா’ என்ற படத்தை இயக்கி வரும் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த படத்திலும் கதாநாயகியாக அலியா பட், நடித்து வந்தார்.

ரன்பீர் மற்றும் பன்சாலிக்கு கொரோனா உள்ளதால், அவர்கள் படங்களில் நடித்து வந்த அலியா பட்டும், தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

– பா. பாரதி