கொல்கத்தா:

பிஎல் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள்  ராணா, உத்தப்பாவின் அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணிக்கு 2019 ரன்கள் இலக்க நிர்ணயிக்கப்பட்டது.

இன்றைய போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.  அதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ்லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இதில், சுனில் நரைன் அதிரடியாக ரன் குவிக்க கிறிஸ்லின் நிதானமாகவே ஆடினார். இந்த நிலையில், 34 ரன் எடுத்திருந்தபோது, கிறிஸ்லின் அவுட்டானார், அதையடுத்து, நரைனும் 24 ரன்களில் ஆட்டத்தை பறிகொடுத்து விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து உத்தப்பா, ராணா ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. உத்தப்பா அதிரடியாக ரன் குவித்து வந்தார். இந்த ஜோடி 10 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்திருந்தது. அதையடுத்து, ராணாவும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். 28 பந்தில் 50 ரன்கள் எடுத்து அரை சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய ராணா, 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பிறகு, ரஸல் களமிறங்கினார். இதனிடையே ராபின் உத்தப்பாவும் 41-ஆவது பந்தில் தனது அரைசதத்தை எட்டினார். ராணா விக்கெட்டுக்கு பிறகு அடுத்த 3 ஓவர்களில் கொல்கத்தா அணி 17 ரன்கள் மட்டுமே குவித்தது.  இதனிடையே ஷமி வீசிய 17-ஆவது ஓவரில் ரஸல்  போல்டானார். ஆனால், அது நோ பாலாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவுட்டில் இருந்து தப்பிய ரஸல் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 18-ஆவது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்த நிலையில், 19 வது ஓவரிலும், , ஹாட்ரிக் சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உட்பட 25 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில், 20வது ஓவரில் டை வீசிய பந்தில் ரஸல் ஆட்டத்தை இழந்தார். அவர்   17 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 48 ரன்கள் எடுத்தார். இந்த பரபரப்பா நிலையில்,  உத்தப்பா கடைசி பாலில் பவுண்டரி அடித்ததால் கடைசி ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.  இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.