பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன்.
ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று காடன் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி மற்றும் எடிட்டராக புவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் ராணா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங்கை முழு மூச்சாக நிறைவு செய்தார். அருகில் இயக்குனர் பிரபு சாலமன் உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#RanaDaggubati begins dubbing for #HaathiMereSaathi/#Aranya/#Kaadan… Releasing in cinemas on 26th March 2021 in #Hindi, #Tamil, and #Telugu pic.twitter.com/KI1UEk3y13
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) February 14, 2021