தமிழ் திரை உலகில், 1980 – 90 களில் நடிகை ரம்யா கிருஷ்ணன், முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் அவருக்கு , அற்புதமான இரண்டாம் இன்னிங்சை பெற்றுக்கொடுத்தது.
அந்த படத்துக்கு பிறகு ,தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழி படங்களில் ‘பிஸி’யாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், வாங்கும் சம்பளம் குறித்து தெலுங்கு ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளன.

ரம்யா, நாளொன்றுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்துக்கு அதிக பட்சம் 10 நாள் கால்ஷீட் கொடுப்பார்.
இந்த கணக்குப்படி பார்த்தால், ரம்யா கிருஷ்ணன் ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். சில முன்னணி கதாநாயகிகளை விட அவரது ஊதியம் அதிகம்.
இப்போது, விஜய தேவரகொண்டா நடிக்கும் ‘பைட்டர்’ என்ற படம் உள்ளிட்ட மூன்று தெலுங்கு படங்களில் ‘பிஸி’யாக இருக்கிறார், ரம்யா.
– பா.பாரதி
Patrikai.com official YouTube Channel