ராமண்ணா வியூவ்ஸ்:
ன்று என்னை சந்திக்க வந்த நண்பர் கோவிந்த், தனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். “இப்படியுமா பெண்கள் இருப்பார்கள்” என்று நினைக்க வைத்தது அந்த சம்பவம்.
இதோ அந்த சம்பவம்ச
“கடந்த வாரம்  ஒரு நாள், அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும்போது நேற்று  கால் டாக்சியில் (தெரியாத்தனமாக) ஷேர் புக் செய்துவிட்டேன். (ஷேர் என்பது நம்முடன் சேர்ந்து இன்னும் இருவர் பயணிப்பர்.)
நான், , ஒரு இளம்பெண். இன்னொரு வயதான் பெண்மணி
ஏறிய உடனே அந்த இளம்பெண், ஓட்டுநரிடம் “என்னைத்தானே முதலில் இறக்கிவிடுவீர்கள்”  என்றார்.
அதற்கு ஓட்டுனர், “நீங்கள் இறங்க வேண்டிய இடம் தூரமாக இருக்கிறது. ஆகவே கடைசியாக உங்களை இறக்கிவிடுவேன்” எனறார்.
ஆனால் அந்த இளம் பெண்ணோ தான் ஐடி. நிறுவனத்தில் (புகழ் பெற்ற நிறுவனத்தின் பெயரைச் சொன்னார்) பணி புரிவதாகவும், வேலைக்கு நேரமாகிவிட்டது என்றும் தனது அலுவலகத்துக்கு முதலில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அதற்கு ஓட்டுனர், “வழிகாட்டி படத்தின் (ரூட் மேப்) படித்தான் தான் செல்ல முடியும். தவிர அதுதான் எளிதானதும்கூட என்று  பொறுமையாக சொன்னார்.
அவ்வளவுதான் “ஒரு பெண்ணுக்காக அப்படி போக மாட்டீர்களா.. எனக்கு சேப்டிதான் முக்கியம்..  நான் எப்படி தனியா  உன்கூட வர முடியும்..” என்றெல்லாம் கத்த ஆரம்பித்துவிட்டார் அந்த இளம்பெண்.

ராமண்ணா
ராமண்ணா

ஓட்டுனர், “மேடம்.. நான் 15 வருடங்களாக  ஓட்டுனராக இருக்கிறேன். இது என் சொந்த வண்டி.  என்னை நம்பலாம். அப்படி இல்லை என்றால், எனது செல் எண், வண்டி எண் எல்லாமே உங்கள் மொபைலில் இருக்கும். அதை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பார்வேர்ட் செய்யுங்கள். தகவலும் சொல்லுங்கள்” என்றார் பணிவாக.
ஆனாலும் அந்த இளம் பெண் விடவில்லை, தான் பேசியதையே பேசினார். ஓட்டுனர், “அப்படியானால், நீங்கள் ஷேர் காரில் புக் செய்திருக்கக் கூடாது மேடம். தனி காரில் சென்றிருக்க வேண்டும்” என்றார்.
அவ்வளவுதான் ஆவேசத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் அந்த இளம் பெண். “நான் எதில் பயணம் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு நீ யார்.. நேராக போலீஸ் ஸ்டேசன் போ.. “ என்றார்.
பயந்துபோன டிரைவர், “சரி மேடம்.. முதலில் உங்களை விட்டுறேன். எனக்கு டீசல் அதிகம் செலவாகும். தவிர எங்கள் கம்பெனியில் கேள்வி கேட்பார்கள். ஆனாலும் பரவாயில்லை” என்று சொல்ல.. அதுவரை சகித்துக்கொண்டிருந்த  இன்னொரு  பயணியான  வயதான பெண்மணிக்கு கோபம் வந்துவிட்டது. “ஏனம்மா. இப்படி ரகளை செய்யறீங்க.” என்று கேட்க, .., அந்த முதிய பெண்மணியை ஏச ஆரம்பித்துவிட்டார்..
அதுவரை பொறுமை காத்த எனக்கு அதற்கு மேல் முடியவில்லை. ஓட்டுனரிடம், போலீஸ் ஸ்டேசனுக்கே போகச் சொன்னேன்.  இதை அந்த இளம்பெண் எதிர்பார்க்கவில்லை போலும்..
அவரது ஆவேசம் அப்படியே அடங்கியது. ஓட்டுநரிடம், அவர் விருப்படி செல்லுமாறு கூறி அமைதியானார்.
அதிகபட்சம் முக்கால் மணி நேர பயணம். அதை ரணகளமாக்கிவிட்டார் அந்த இளம்பெண். அவரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
கட்டணம் அதிகமாக இருக்கக்கூடாது. ஆனால் விரைவாக சென்றுவிட வேண்டும். செல்லுமிடத்துக்கு ஏற்ப முன்கூட்டியே புறப்டுவதும் இல்லை. யாருக்கும் மரியாதை தருவதில்லை. போலீஸ் பெயரைச் சொல்லி பொய்யாக மிரட்டுவது.  போலீஸுக்கு போகலாம் என்றால் பயந்து அடங்குவது.
இப்பத்திய இளம்பெண்கள்  எல்லோரும் இப்படி என்றோ, ஐடி பெண்கள் எல்லோரும் இப்படி என்றோ சொல்லவில்லை.. ஆனால்  இது  இளைய  தலைமுறையின்  கீழ்த்தர புத்தியின் வெளிப்பாடு. இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. வளர்த்தெடுத்த மூத்த தலைமுறையும் குற்றவாளிதான்” நண்பர் சொல்லி முடிக்க எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.