கோவை:
கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2003ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை அ.தி.மு.க. அரசு தான் மூடியது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நிலுவையில் உள்ளது.

காவிரி பிரச்னையை டுவிட்டர், பேஸ்புக் மூலம் தீர்க்க கூடியதல்ல. சட்ட ரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்னை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி பிரதமரிடம் நேரில் மனு அளித்துள்ளோம்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் கூறுவது பொய். யாரையோ தப்பிக்க வைக்கவே அவர் இவ்வாறு கூறுகிறார்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel