டில்லி
மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் அயோத்தி மற்றும் சப்ரிமலை விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படாதது பாரம்பரியம் எனவும் முத்தலாக் தடை என்பது பாலின வேறுபாட்டுக்கு எதிரான சட்டம் எனவும் தெரிவித்தார். அத்துடன் ராமர் கோவில் கட்டுமானம்குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பாஜகவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சரும் பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், “சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அம்மாநில அரசும் அவர்களை தடை செய்யவில்லையே? நாம் பெண் குழந்தைகளைப் பெறுவோம் பெண் குழந்தைகளைக் காப்போம் என கோஷம் எழுப்புகிறோம்.
அப்படி இருக்க பெண் என்பதால் பாகுபாடு இருக்கக் கூடாது. பெண்கள் விண்வெளிக்கே சென்று வருகின்றனர். அப்படி இருக்க அவர்கள் கோவிலுக்குள் ஏன் வ்ரக்கூடாது? அதே நேரத்தில் ராமர் கோவில் கட்டுமானம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்ப்புக்காக பிரதமர் காத்திருப்பதாக கூறியதை நான் வரவேற்கிறேன். ராமர் கோவில் விவகாரத்த்ல் அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என செய்தியாளர்களிடம்தெரிவித்துள்ளார்.