அயோத்தி:
அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அயோத்தி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர்கோவில் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, அத்வானி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழாவில் பங்கேற்க மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாடு முழுவதும் இருந்து, ராம பக்தர்கள் பலரும் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதே அங்கு வரத்தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையில், ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தடுக்க பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பயங்கர வாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் எச்சரிக்கைப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, அயோத்தியின் அனைத்து நுழைவாயில்களும் சீல் வைக்கப்பட்டு, எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தியில் புதிய நபர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 6ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.