பாட்னா,
அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதற்குள் அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்படும் பாரதியஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறி உள்ளார்.
பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியசாமி, ராமர்கோவில் கட்டுவது குறித்து பேசினார். அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பல்வேறு தடைகள் கடந்த ஆட்சியின்போது ஏற்பட்டன. தற்போது அந்த தடைகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு தேவையான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் கோவில் கட்டுமானப்பணி தொடங்கும்.
இந்த ஆண்டு நாம் தீபாவளியை கொண்டாட இருக்கிறோம். அதே நேரத்தில் அடுத்த தீபாவளிக்குள் ராமர் கோவில் கட்டப்படும். நாம் அதை வரவேற்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும்.
அதேபோல வடக்கு பீகாரில் உள்ள சீதாமர்கி எனும் இடம்தான் சீதை பிறந்த இடமாகும். ஆகவே அந்த இடத்திலும், சீதைக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும் என்றும், அங்கு ஒரு பல்கலைக் கழகமும் உருவாக்கப்படும். அந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பாரம்பரிய சிறப்புகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.