இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமானார் ஷங்கர். அத்துடன் இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார்.

நேற்று நடிகர் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் சென்னை வந்து ஷங்கரை சந்தித்தனர். படம் குறித்த முக்கியமான தீர்மானங்கள் இந்த சந்திப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

இப்படத்திற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர். முதல்கட்டமாக நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார்.

மூவரும் சந்தித்து பேசிய நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.