4
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தை, கவர்ச்சி கன்னி என்பதைவிட சர்ச்சை மன்னி என்று அழைக்கலாம். தொடர்ந்து ஏதாவது களேபாரம் செய்துகொண்டே இருப்பார்.  சமீபத்தில்கூட, “ரசிகர்கள் என்னிடம் எதிர்ப்பார்ப்பது கவர்ச்சியைத்தான்… நடிப்பை அல்ல. ஸோ.. எனக்கு .யாரும் அட்வைஸ் செய்யாதீர்கள்” என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார்.
1
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகை என தன்னை சொல்லிக்கொள்ளும் ராக்கி, சமீபத்தில்  அதை வெளிப்படுத்தவும் செய்தார்.
அமெரிக்க இலினாய்ஸ் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள், 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 7-ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  ராக்கி சாவந் அணிந்துவந்த உடை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
2
 
கவர்ச்சிகரமான கருப்பு  உடையில் முன்புறம், பின்புறம் என நீக்கமற மோடியின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
5
வைத்த கண் வாங்காமல் அனைவரும் மோடியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தான் ஒரு மோடி ரசிகை என்பதை ராக்கி நிரூபித்துவிட்டார் என்று சிலர் பாராட்டவும் செய்தனர்!