சென்னை:

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் கே.பி.முனுசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில்  இன்று வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளரும் மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான தம்பிதுரை போட்டியிடுவார்கள் என்றும், மற்றொரு இடம்,   அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றொரு வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.