புதுச்சேரி

பாஜகவுக்கு புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னாள் நியமன உறுப்பினர் செல்வகணபதி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது.  இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி கூட்டணியில் இருந்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.   இந்த ஒரு உறுப்பினர் பதவிக்கு ஆளும்கட்சிகளான என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியாக இந்த உறுப்பினர் பதவியை பாஜகவுக்கு ஒதுக்க என் ஆர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.  அதையொட்டி பாஜக டில்லி தலைமை வேட்பாளராக செல்வகணபதியை அறிவித்துள்ளது.  இவர் புதுச்சேரி மாநிலங்களவையில் முன்னாள் நியமன உறுப்பினர் ஆவார்.  இவர் கல்வியாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வகணபதி ஆர் எஸ் எஸ் பின்புலம் உள்ளவர் ஆவார்.  இவர் புதுச்சேரி மாநில பாஜக பொருளாளர் பதவி வகித்து வருகிறார்.  இதன் மூலம் முதல் முறையாகப் புதுச்சேரியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டி இல்லாமல் வெற்றி பெற உள்ளது.