சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் ராஜ்யசபா தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. பூத் கமிட்டி அமைப்பது, மக்களை சந்திப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கன திமுக கூட்டணி கட்சிகள் அக்கட்சியுடன் தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியின் நிலை என்ன என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலை உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த கூட்டணியில் பாமக, தேமுதிமுக சேருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இநத் நிலையில், அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டியிருக்கிறார். ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி நாளை (4-ந்தேதி) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இ ந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தங்களது தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டும் என்று நாளைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்துகிறார். மேல்சபை எம்.பி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.
ராஜ்யசபா தேர்தல்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது…