சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட, வேட்பாளர் எம்எம் அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதிமுக எம்.பி. முகமதுஜான் மறைந்த ஒரு இடத்துக்கு மட்டும் செப்.13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிட்டார். அவர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 27ம் தேதி எம்.எம்.அப்துல்லா சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து அதிமுக உள்பட வேறு எந்த ஒரு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒருசில சுயேச்சைகள் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்தது, இன்று வேட்புமனு திரும்பபெற கடைசி நாளாக இருந்தது. அதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் புதுகை அப்துல்லா (எம்எம் அப்துல்லா) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி மற்றும் செயலாளர் சீனிவாசன் அறிவித்து உள்ளார்.