சென்னை:

ரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், வளைதளம் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.

இதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் அரசியல் பயணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், ரஜினிகாந்த நடிக்கும் 2.0 என்ற  படத்தின் தயாரிப்பு நிறுவனமான, இலங்கையை சேர்ந்த  லைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்ட  ராஜு மகாலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]