டெல்லி: முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
லடாக் எல்லையில் சீன வீரர்களின் அத்துமீறல் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்து வருவதால், பிரச்னை விஸ்வரூமாகி உள்ளது.
எல்லை பிரச்னை குறித்து இரு நாட்டு பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினர். இந் நிலையில், சீன எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். எல்லை பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து அவர் கலந்து பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.