டில்லி
ராஜ்கும்மர் ராவ் நடித்த நியூடன் என்னும் இந்தி திரைப்படம் ஆஸ்கார் 2018 போட்டிக்கு அனுப்பபட உள்ளது.
அமித் மசூர்கர் என்னும் இயக்குனரால் திருஷ்யம் ஃபிலிம்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட இந்தித் திரைப்படம் நியூடன். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராஜ்கும்மர் ராவ் நடித்துள்ளார். மற்றும் ரகுபீர் யாதவ் வும் அஞ்சலி பாடிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விமர்சகர்கள் பலரும் பாரட்டி உள்ளனர்.
இந்தப் படத்தில் அரசு ஊழியராக வருகிறார் ராஜ்கும்மர். சதீச்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நகரில் அவர் தேர்தல் பணிக்கு செல்லும் போது நடக்கும் நிகழ்வுகளை பற்றி படத்தின் கதை சொல்கிறது. இந்தப் படத்தில் அவரது பெயர் நியூடன் குமார். இந்தப் படம் பல திரைப்பட விழாக்களிலும் கலந்துக் கொண்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
தற்போது ஆஸ்காரில் மற்ற மொழிப் படங்களுக்கான தேர்வு வரிசையில் இந்தியப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகன் ராஜ்கும்மர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து குழுவில் உள்ளோருக்கு வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.