டெல்லி: தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் வழங்கினார். இதையடுத்து, அவர் முறைப்படி இன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
1984ம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிவைச் சோந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமார். அசோக் லவாசாவின் ராஜிநாமாவை தொடா்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா பணிபுரிகிறார். ஆகையால் தமது தோதல் ஆணையா் பதவியை அவா் ஆகஸ்டு 31ம் தேதியோடு ராஜினாமா செய்தார்.