இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அதிபரும், பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், ‘‘ 1990ம் ஆண்டு ராஜீவ்காந்தியிடம் காஷ்மீர் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படுத்துவது குறித்து பெனாசீர் பேசினார். ராணுவ தளபதி ஜியா உள்பட பாகிஸ்தானில் இருந்து யாரும் காஷ்மீர் விவகாரம் குறித்து எங்களிடம் பேசவில்லை என பெனாசீரிடம் அப்போது ராஜீவ்காந்தி கூறினார்.

முக்கிய பிரச்னையான காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை ராஜீவ்காந்தி ஏற்றுக் கொண்டார். ஆட்சிக்கு வந்தபின் இது குறித்து பாகிஸ்தானிடம் பேசப்படும் என்றும் ராஜீவ்காந்தி தெரிவித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் படுகொலை செய்யப்பட்டு விட்டார். காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தவிர வேறு யாரும், எந்த அரசும் இந்தியாவிடம் பேசவில்லை’’ என்றார்.