சென்னை:

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையை யேயும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், ரஜினியின்  சென்னை போயஸ் கார்டன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று தூத்துக்குடிக்கு பயணமான ரஜினி,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்  காயம் அடைந்தவர்களை  நேரில் சந்தித்து நடிகர் ரஜினி  ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது,  மக்கள்  பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்,  போராட்டம் என்பது தீர்வாகாது என்றும் தூத்துக்குடியில் 13 பேர் உயிரிழப்புக்கு காரணம்   சமூக விரோதிகள்  போராட்டத்தில் உள்ளே நுழைந்ததுன் என்றும், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க  வேண்டும் என்றும் சமூக விரோதிகளால் புனிதமான போராட்டம் ரத்த  காயங்களுடன் முடிகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இதன் காரணமாக ரஜினிக்கு எதிராக எந்தவொரு அமைப்பும் போராட்டம் நடத்த முன் வரலாம் என்ற ரகசிய தகவலின் பேரில்  ரஜினியின் இல்லம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்த வழியாக செல்லும் கார், ஆட்டோக்களை சோதனையிட்டு வருகின்றனர்.