
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் ஏஆ.ர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார் . அடுத்ததாக இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் “அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நெத்தியடி திரைப்படம் மூலமாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் கிங்காங் என அழைக்கப்படும் நடிகர் சங்கர் பிறந்ததிலிருந்தே சிறிய உடல் தோற்றம் உடையவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த அதிசய பிறவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக கிங்காங் பல முறை முயற்சி செய்து அது நிறைவேறாமல் போனது இந்தச் செய்தியை அறிந்த ரஜினிகாந்த் நடிகர் கிங்காங்க்கு போன் செய்து பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த தொலைபேசி உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]Thalaivar phone call to king Kong❤@rajinikanth | #Annaatthe pic.twitter.com/PQgQpW52Dv
— Rajini Soldiers (@RajiniSoldiers) May 9, 2021