இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் தேவா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டர் இன்று வெளியானது.
1991 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.
தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார்.
நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் மற்றும் உபேந்திரா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
1986ம் ஆண்டு வெளியான மிஸ்டர் பாரத் படத்திற்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் கைகோர்த்திருக்கும் சத்யராஜ் இந்தப் படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.