சென்னை: ரஜினி நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாளில் ரஜினி சென்னை திரும்புவார் என முக அழகிரி தெரிவித்து உள்ளர். இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஐதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு குழுவினங 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ரஜினி தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது சோதனை முடிவு தெரிவித்தாலும், ரித்தஅழுத்தம் காரணமாக ரஜினி ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படும் என அப்போலோ நிர்வாகம்அறிவித்து உள்ளது.
ரஜினியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர், துணைமுதல்வர் உள்பட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் ரஜினியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த கலைஞர். கொண்டாடப்பட வேண்டியவர். அவர் விரைவில் பூரண குணமடைந்து நல்ல ஆரோக் கியத்தோடும், அமைதியோடும் நிறைவாழ்வு வாழவேண்டும் என்கிறார் கரூர் எம்.பி. ஜோதிமணி.
இந்நிலையில், முக அழகிரி தொலைபேசியில் ரஜினியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அப்போது தான் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சென்னை திரும்புவேன் என்று சொன்னதாக அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.