
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தலைவர் 168’.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ரஜினியின் லுக் எதுவுமே வெளியாகவில்லை. அனைத்திலுமே ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
இந்நிலையில் தெலுங்கு ‘பிக் பாஸ் 3’ வெற்றியாளர் ராகுல் சிப்லிகஞ்ச், ரஜினியை ‘தலைவர் 168’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் . அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கழுத்தில் ருத்திராட்ச மாலை, சிறிதாக முறுக்கிய மீசை என இந்த புதிய லுக் வைரலானது.ரஜினியின் லுக் வைரலானதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் சிப்லிகஞ்ச் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தை நீக்கிவிட்டார். படக்குழுவினர் தரப்பிலிருந்து அவரிடம் பேசியிருப்பதால், நீக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
[youtube-feed feed=1]