சென்னை: உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக வெளியே இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கோரிக்கை வைத்திருந்தார். அதை உச்சநீதி மன்றம் நிராகரித்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக  விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், அவரை கைது செய்ய காவல்துறை முய்றசி எடுத்து வந்தது. இதுகுறித்து அறிந்த அவர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் கொடுக்க மறுத்து விட்டது. இதையடுத்து திடீரென தலைமறைவான ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில், தலைமறைவாகி இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பரபரப்பான விசாரணையைத் தொடர்ந்jது. அப்போது, இந்த வழக்கில் காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியாக இல்லை. ஏன் இந்த வழக்கில் அவசர அவசரமாக செயல்பட்டீர்கள். அவரின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. அதற்குள் ஏன் அவசர அவசரமாக கைது செய்தீர்கள், தமிழ்நாடு அரசு இதில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியதடன், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவரது ஜாமின் விரைவில் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.