சென்னை

நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவ மாணவியர்களுக்கு உதவி புரிய ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் முன் வந்துள்ளது.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத பல தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இதனால் மாணவர்கள் அங்கு தங்குவதற்கும் உணவுக்கும் பெரிதும் துயர் அடையலாம் என கூறப்பட்டது.  அவர்களுக்கு உதவ ராஜஸ்தான் தமிழ் சங்கம் தற்போது முன் வந்துள்ளது.

அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளது கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்/பகிரவும்

திரு. முருகானந்தம் (9790783187)

திருமதி. சௌந்தரவல்லி (8696922117)

திரு. பாரதி (7357023549)”

என கூறப்பட்டுள்ளது.