பட்லரின் அதிரடியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

Must read

ஜெய்ப்பூர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பட்லரின் அதிரடி காரணமாக அந்த அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

நேற்று இரவு  ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே அணியின் சார்பாக  சுரேஷ் ரெய்னா 52 ரன்ககளுடம, கேப்டன்  தோனி 33 ரன்கள் எடுத்திருந்தனர.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன்  ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டோக்ஸ், கேப்டன் ரகானே களமிறங்கினர். ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும், ரஹானே 4 ரன்னிம் வெளியேற ஆட்டம் வலுவிழந்தாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றால் போல, தொடர்ந்த களமிறங்கிய சாம்சன் 21 ரன்னிலும், சோப்ரா 8 ரன்கள் எடுத்த நிலையிலும் பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ராஜஸ்தான் ரசிகர்களிடையே சோகம் நிலவியது. ஆனால் அதையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய அரைசதம் விளாசினார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 4 டிவிக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி  வெற்றி இலக்கை அடைந்தது. பட்லர் இறுதி வரை ஆட்ட மிழக்காமல் 95 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  பிளே ஆஃ ப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

More articles

Latest article