பிரம்மா கோவில்- புஷ்கர், ராஜஸ்தான்
பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே இந்து கோவில் ராஜஸ்தானின் புஷ்கரில் இருக்கும் ஜகத்பிதா பிரம்மா கோவில் ஆகும். இது அஜ்மீரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலுடன் ஒரு ஏரி இணைக்கப்பட்டுள்ளது, இந்த ஏரி புஷ்கர் ஏரி என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மதேவர் இந்த ஏரியில் யாகம் செய்ததாகப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிரம்ம தேவரின் மனைவி சரஸ்வதி தேவி தாமதமாக வந்ததால் பிரம்ம தேவர் காயத்ரி தேவியைத் திருமணம் செய்து கொண்டு அந்த சடங்கை நிறைவு செய்தார். இந்த கோயில் காயத்ரி சக்தி பீடமாக உள்ளது.
சரஸ்வதியின் சாபம்
தனது இடத்தில் காயத்ரி தேவி அமர்ந்திருப்பதைக் கண்டு கோபமுற்ற சரஸ்வதி தேவி அவர்களைச் சபித்தார் அந்த கோவிலையும் சபித்தார். இந்த சாபத்தின் காரணமாக எந்த திருமணமான எந்த ஆணும் கோவில் கருவறைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதையும் மீறி நுழைந்தால் அவர்களின் திருமண வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.
இதனால் இங்குள்ள பூசாரிகள் திருமணமாகாதவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.