ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று உ.பி.யில் விவசாயிகள் போராட்டம் வன்முறைகளமாக மாறிய நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட சென்ற விவசாயிகள்மீது காவல்துறை தடியடி நடத்தி வெளியேற்றினர். இந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியைக் கொள்முதல் செய்யக் கோரியும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஹனுமன்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்ல வலியுறுத்தினர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலக, நுழைவு வாயில் காவல்துரைமூடப்பட்டது.
ஆனால், தடையை மீறி சில விவசாயகிள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் செய்ய முயன்றனர். இதனால், விவசாயிகள்மீது, அம்மாநில காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியத்தனர்.
இத்தடியடி குறித்து பேசியுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஹனுமன்கர் மாவட்ட குழு உறுப்பினர் ரகுவீர் சிங் வர்மா, “குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரி வருகின்றனர். விவசாயிகள் அமைதியான வழியில்தான் போராடினர். ஆனால், காவல்துறை அவர்கள்மீது தடியடி நடத்தியது” என்று கூறியுள்ளார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநில காங்கிரஸ் அரசு, “சில விவசாயிகள் தடைகளை தாண்டி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால், அவர்கள்மீது தடியடி நடத்த வேண்டியதாயிற்று” என்று தெரிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் போராட்டம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருஐகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் உச்சநீதிமன்றமும், விவசாயிகளின் போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.