ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சௌமூ எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்தது.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர் வந்து சிறுத்தையை விரட்டி அடித்தனர்.

ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ராஜஸ்தான் நர்சிங் மருத்துவமனையின் அடித்தளத்தில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிறுத்தையை நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காலை 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இரவு சுமார் 2 மணியளவில் படுக்கைகள், பைக்குகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அடித்தளத்திற்குள் சிறுத்தை நுழைந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனையின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் முட்புதர்கள் மண்டியிருப்பதால் அங்கு சிறுத்தை பதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதி சிறுத்தையை விரட்டி அடிக்க பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர்.

இருந்தபோதும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் போராடினர் இதனால் அந்த மருத்துவமனையின் ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் தவிர அப்பகுதி மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.