ஜெய்ப்பூர்:
முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏ.க்களுக்க சம்பள உயர்வு அளிக்கும் மசோதாவை ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனாதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 1.55 கோடி கூடுதலாக செலவாகும்.
*முதல்வரின் மாத சம்பளம் ரூ. 35 ஆயிரத்தில் இருந்து ரூ. 55ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*அமைச்சர்களின் சம்பளம் ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*எம்எல்ஏ.வின் சம்பளம் ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்ட்டுள்ளது.
*பாராளுமன்ற செயலாளர் சம்பளம் ரூ. 27 ஆயிரத்தில்இருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*அரசு தலைமை கொறடா சம்பளம் ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு துணை தலைமை *கொறடா சம்பளம் ரூ. 27 ஆயிரத்தில் இருந்து ரூ. 42 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எம்எல்ஏ.க்களுக்கு கிடைக்கும் இதர சலுகைகள்
*ரயில் பயணப்படி ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*செயலாளர்கள் படி ரூ 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*தினப்படி மாநிலத்திற்குள் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்ப்டடுளளது. மாநிலத்திற்கு வெளியே ரூ. ஆயிரத்து 250ல் இருந்து ரூ. ஆயிரத்து 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
*பயணப்படி ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*துறை சார்ந்த படிப்பு படி ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*வாகனப்படி ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்த முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா, கார் உள்ளிட்ட இதர வசதிகள் செய்தி கொடுக்கப்படுகிறது.