ஜெய்ப்பூர்:
அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மாநில கவர்னருக்கு ரத்த பரிசோதனையை அலட்சியமாக கையாண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யான் சிங்குக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கவர்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக பரிசோதனை முடிவு அளித்த அரசு மருத்துவமனை மீது உயர்மட்ட விசாரணை நடத்த கவர்னர் கல்யான் சிங் உத்தரவிட்டுள்ளார்.