பில்வாரா, ராஜஸ்தான்
மனைவிக்கு வீட்டில் கழிவறை கட்டித்தராததால் கணவரிடமிருந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் உள்ள ஒரு 24 வயது இளம்பெண் இங்குள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தான் 4 ஆண்டுகளாக கழிவறை கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டும் தனது கணவர் கட்டித்தரவில்லை என கூறி உள்ளார். மேலும் தன்னை திறந்த வெளிக் கழிப்பிடத்தை உபயோகிக்க சொல்வதாகவும், அது தனக்கு கவுரவக் குறைவாக தனக்கு தோன்றுவதாகவும் கூறி உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீட்டில் கழிவறை கட்டித்தராமல் மனைவியை திறந்த வெளிக் கழிப்பிடத்தை உபயோகிக்கச் சொல்வது கொடுமையான செயல் என்றும், அப்படி கழிவறையை கட்டித் தரக்கூட இயலாத கணவனுக்கு மனைவி எதற்கு என கேள்வியை எழுப்பி, அந்தப் பெண்ணுக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து வழங்கி உள்ளது.
இந்திய நீதி மன்ற வரலாற்றில் கழிவறை கட்டித் தாராக காரணத்துக்காக விவாகரத்து வழங்குவது இதுவே முதல் முறையாகும்.