ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 48.
அம்மாநிலத்தின் வல்லபாநகரின் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷக்தாவத். கல்லீரல் தொற்று காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி மருத்துவமனையில் ஷக்தாவத் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பிற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவிற்கு மற்ற அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஷக்தாவத்துக்கு மனைவி, மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.