ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் ஆண்களை ஈர்க்கும் ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்து பல்தியாபுரா பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘ ஆண்களை ஈர்க்கும் வகையில் பெண்கள் ஆடைகளை அணியக் கூடாது. ஜீன்ஸ், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

மேற்கத்திய கலாச்சார முறையை பின்பற்றுவதன் மூலம் கலாச்சார சீரழிவு ஏற்படுவதோடு, பாலியல் வன்கொடுமை குற்றங்களும் அதிகரிக்கின்றன. இதனை தவிர்ப்பதற்காக இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.