பில்வாரா:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படும் காட்சி
குழந்தைகள் காப்பாற்றப்படும் காட்சி

இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை பொழிந்து வருகிறது. பீகார், ஒரிசா, உத்தர்கான்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக ஆறு, குளங்கள் நிறைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள மக்கள் மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  பில்வாரா மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சாலைகள் அரித்து செல்லப்பட்டு உள்ளது. சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால்  தரைப்பாலம் எங்குள்ளது என தெரியாத வகையில் ரோடு முழுவதும் வெள்ளம் பாய்ந்து செல்கிறது.
இன்று காலை  தனியார் பள்ளி வேன் ஒன்று 50 குழந்தைகளுடன் சாலையை கடக்க முயற்சித்தது. திடீரென வெள்ளம் அதிகமானதால், சாலையை கடக்க முயன்ற பள்ளி வேன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ளத்தில் மூழ்கும் பள்ளி வாகனம்
வெள்ளத்தில் மூழ்கும் பள்ளி வாகனம்

பள்ளி வேனில் இருந்த மாணவர்கள் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு வந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் தத்தளித்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, அவரசம்  அவசரமாக  குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில்  பள்ளி வேனின்  மேல்தளம் வரை தண்ணீரில் மூழ்கியது.
இளைஞர்களின் தீவிரமான மீட்பு பணியால் அனைத்து குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிகிறது.