சென்னை
சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ளது. ஆயினும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்து இருந்தது.
இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகலில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் ஆகிய இடங்களில் பல பகுதிகளில் தற்போது மழை பரவலாகப் பெய்து வருகிறது.
சென்னை, குன்றத்தூர், காட்டுப்பாக்கம், பெரம்பூர், திரு வி க நகர், கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது.
[youtube-feed feed=1]