சென்னை :

மிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது.

இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வரும குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக மழை வாய்ப்பு உள்ளது என்றும்,  சென்னையை பொறுத்தவரை லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 7ந்தேதி தெரிவிக்கும்போது, அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்  காரணமாக வரும் 8-ம் தேதி 9-ம் தேதி தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மேகமூட்டமாகவும், லோசான மழை தூறல்களும் விழுந்த நிலையில், இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.