சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகம் நோக்கி வங்க கடலில் இருந்து கிழக்கு திசை நோக்கி காற்று வீசுகிறது. இதில் வேக மாறுபாடு ஏற்பட் டுள்ளது.  ஆகவே, பிப். 17-ம் தேதி (இன்று) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மேலும் வரும் 18-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்யலாம்.

காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான  மழை அளவுகளின்படி அதிகபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 5 செ.மீ., சுருளக்கோடு, பெருஞ்சாணி அணை, இரணியல், புத்தன் அணை, களியல், தக்கலை, குழித்துறை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ.  மழைப் பதிவாகியுள்ளது. “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.