சென்னை
தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகின்றது இதனால் மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமான மழை அளவை விட இது சற்றே குறைவு என்றாலும் சென்ற ஆண்டை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை நகரில் தற்போது மேக மூட்டமாக காணப்படுகிறது/
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 2செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]