ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற IPL 22வது ஆட்டம் புனே சூப்பர் கியான்த்ஸ் அணிக்கும் ஹைதராபாத் சன் ரைசெர்ஸ் அணிக்கும் நடைபெற்றது. ‘டாஸ்’ ஜெயித்த புனே அணி பீல்டிங் செய்யும் என்று அறிவித்தது.
இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாகத் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை வீசிய திண்ட வார்நேர் “டுக் அவுட்” இக்கு அவுட் அனார் . இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஐதராபாத் அணி திணறியது. ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 20 ஓவர்களில் 118/8 என்ற இலக்கு புனே அணிக்கு வைத்தது.
FotorCreated
புனே அணி விளையாடிய போது 2 முறை மழையால் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் அணியை போல புனே அணி தொடக்க ஆட்டக்காரர் ரஹானே “டுக் அவுட்” அனார் பின்னர் ஸ்மித் மற்றும் டு பிளெசிஸ் தொடர்ந்து ஆடிய புனே அணி 11 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது, ஆனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புனே அணி 34 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. புனே அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும்.
புனே 94/3 (ஸ்டீவ் ஸ்மித் 46, டு பிளெசிஸ் 30 ) ஹைதராபாத் 118/8 (தவண் 56* . அசோக் டிண்டா 3/23).